Connect with us

Raj News Tamil

தேர்வு கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய அண்ணா பல்கலைக்கழகம்!

தமிழகம்

தேர்வு கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய அண்ணா பல்கலைக்கழகம்!

தேர்வு கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய அண்ணா பல்கலைக்கழகம்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% அதிரடியாக உயர்ந்துள்ளது.

இளநிலை பொறியியல் படிப்பு தேர்விற்கான கட்டணம் ஒரு தாளுக்கு ரூ.150 ஆக இருந்த நிலையில், தற்போது 50% உயர்த்தப்பட்டு ரூ.225ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளங்கலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ரூ.300 இருந்த கட்டணம் ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல, முதுகலை பொறியியல் படிப்பு தேர்விற்கான கட்டணம் ஒரு தாளுக்கு ரூ.450 ஆக இருந்த நிலையில் தற்போது 650 ரூபாயாக உயர்ந்துள்ளது. முதுகலை ப்ரொஜெக்ட்டிற்கு, ரூ.600 ஆக வசூலிக்கப்பட்ட கட்டணம், ரூ.900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சான்றிதழ்கள் கட்டணமும் ரூ.1000 யிலிருந்து ரூ.1500 ஆக உயர்ந்தது. இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continue Reading
Advertisement

More in தமிழகம்

To Top