சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவி, பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், ஞானசேகரன் என்பவர், கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் சிறையில் உள்ள நிலையில், தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தற்போதைய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, வழக்கின் விசாரணை, வரும் ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.