உண்மை, அமைதி, மதநல்லிணக்கத்தை விரும்பியவர் அண்ணல் காந்தியார்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர், அனைத்துச் சமயங்களைச் சேர்ந்த பெரியோர், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உண்மை – அமைதி – மதநல்லிணக்கம் ஆகியவற்றை விரும்பிய அண்ணல் காந்தியார் அவர்களை இந்திய மண்ணில் நிலவும் பன்முகத்தன்மைக்கு எதிரான கருத்தியல் கொன்ற நாள் இது..!

காந்தியாரின் உயிரைத்தான் அந்த மனிதவிரோதக் கும்பலால் பறிக்க முடிந்ததே தவிர; அவர் நம்மிடையே விதைத்த சகோதரத்துவத்தை அல்ல..!

அண்ணல் மறைந்த இந்நாள், ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் இந்தியா ஒன்றுதிரள உறுதியேற்க வேண்டிய நாள்..!

இதனை மதநல்லிணக்க நாளாக கடைப்பிடித்து, தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர், அனைத்துச் சமயங்களைச் சேர்ந்த பெரியோர், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.

உறுதியேற்போம்… சமத்துவ இந்தியாவை உறுதிசெய்வோம்” என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News