நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட திமுக எம்.பிக்களை, அநாகரீகமானவர்கள் என்று, மத்திய கல்வி அமைச்சர் விமர்சித்திருந்தார்.
இதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், கல்வி நிதியை வழங்காத, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.
முதல் கேள்வி:
திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு
@dpradhanbjp
அவர்கள் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது கேள்வி:
மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?
உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?
மூன்றாவது கேள்வி:
யார் அந்த சூப்பர் முதல்வர்?
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது” என்று கூறியுள்ளார்.