5000 அகல் விளக்குகளால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவத்தை வரைந்த பாஜகவினர்..!

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக மகளிர் அணி மாலா செல்வகுமார் ஏற்பட்டில் 5000 அகல் விளக்குகளால் அண்ணாமலை மற்றும் அண்ணாமலையாரின் உருவம் வரையப்பட்டது.

இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்று அகல் விளக்குகளை ஏற்றி அண்ணாமலை மற்றும் அண்ணாமலையார் உருவத்தை உருவாக்கினர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.