“தொடர்ந்து போராடுங்க அண்ணே” – சீமானிடம் கூறிய அண்ணாமலை!

பாஜக நிர்வாகியின் இல்லத் திருமண விழா, நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டார்.

அவர் மணமக்களை வாழ்த்திவிட்டு வந்தபோது, அதே திருமணத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் வந்துள்ளார். அப்போது, இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

மேலும், சீமானிடம் பேசிய அண்ணாமலை, “தொடர்ச்சியாக போராடிக் கொண்டே இருங்கள் அண்ணா.. விட்டுவிடாதீர்கள்” என்று கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ, தற்போது, இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாம் தமிழர் கட்சியில் உள்ள பல்வேறு முக்கிய நிர்வாகிகள் விலகல், பிரபல நடிகையின் பாலியல் புகார் என்று பல்வேறு பிரச்சனைகளில், சீமான் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News