அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை பார்த்து, மரத்தில் மேல் தாவும் குரங்கு போல் ஏன் சுற்றி வரீங்க என ஒருமையில் பேசினார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என செய்தியாளர்கல் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். ஆனால் அவர் செய்தியாளர்களை கூறவில்லை என மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், அங்கு கூடியிருந்த செய்தியாளர்களை பார்த்து, மழைக்காலத்தில் பிரஸ் எல்லாம் பாதுகாப்பா இருங்கப்பா என கூறினார். மேலும் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை தட்டி சேஃபா.. இருங்க மழையில் நனையாதிங்க.. எனப் பாசத்தோடு கூறிச் சென்றார்.
தற்போது இதனை பாஜக நிர்வாகிகள், சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.