தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் பி.டி.ஆர், இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மும்மொழிக் கொள்கையை அறிவு உள்ளவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்றும், இருமொழிக் கொள்கையே சிறப்பாக தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
இந்நிலையில், இவரது இந்த பேட்டி குறித்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் மகனும், 3 மொழி தான் படிக்கிறார். அதனால், பி.டி.ஆர்-க்கு தானே அறிவில்லை என்று அர்த்தம் என பதிலடி கொடுத்தார்.
மேலும், திமுகவின் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகள் என்று அனைவரும், 3 மொழி தான் கற்கிறார்கள் என்றும், இல்லை என்று கூறி பத்திரிகையாளர் சந்திப்பை அவர்களால் நடத்த முடியுமா என்றும், விமர்சித்துள்ளார்.