டெல்லியில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தமிழ்நாட்டில் அதிமுக இந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதால் அதை நிரப்ப பாஜகவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கும், மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்துவதற்கும் நாட்டிலேயே முதல் அரசியல்வாதியாக நின்றார்.
2016-ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து அதிமுக விலகிவிட்டது. தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.