கண்ணை மூடிக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ஓட்டு போடுவார்கள் – அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 19-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறீர்களா? என நிருபர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்து அண்ணாமலை கூறியதாவது: நீங்க நினைக்கிற மாதிரி கர்நாடகா கிடையாது. கர்நாடகா மிகவும் வித்தியாசமான மாநிலம். சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் போது கர்நாடகா மக்கள் பல விஷயங்களை பார்ப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தல் என்று வந்துவிட்டால், மத்தியில் பிரதமராக போவது என்று மட்டும்தான் பார்ப்பார்கள். அதை வைத்து பார்க்கும் போது, பிரதமர் மோடியை முழுமையாக நம்பக்கூடிய மாநிலமாக கர்நாடகா இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால், கண்ணை மூடிக்கொண்டு மோடிக்கும், பாஜகவுக்கும் ஓட்டு போடும் மாநிலம். எனவே கர்நாடகா மக்கள் மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள். எனவே இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பாஜக பெறும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

RELATED ARTICLES

Recent News