“விஜய் சி.பி.எஸ்.இ பள்ளி நடத்துவது எத்தனை பேருக்கு தெரியும்” – அண்ணாமலை அதிரடி!

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தமிழகத்திற்கான கல்வி நிதி விடுவிக்கப்படாது என்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி அளித்திருந்தார். இது, தமிழக அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

பல்வேறு அரசியல் தலைவர்கள், இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மும்மொழிக் கொள்கையை வைத்து, தமிழகத்தில் அரசியல் செய்கிறார்கள் என்றும், அரசுப் பள்ளி மாணவர்கள், தனியாருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக, இருமொழிக் கொள்கையை திமுக அரசு பின்பற்றுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், நடிகர் விஜய் சி.பி.எஸ்.இ பள்ளி நடத்துவது எத்தனை பேருக்கு தெரியும் என்று கேள்வி எழுப்பிய அவர், விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் விஜய் பள்ளி நடத்துகிறார் என்றும், விருப்ப மொழியாக இந்தி அல்லது பிற மொழிகளை பயிலலாம் என சீமானே 2018-ல் கூறியிருந்தார் என்றும், தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News