ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை..!

கோவை மாவட்டம் அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்கவுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் விவசாய நிலங்கள் பெருமளவு கையகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டது. இதற்கு எதிப்பு தெரிவித்து கடந்த 7-ஆம் தேதி பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் விவசாய நிலங்களை கையப்படுத்தக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு பாஜக தலைவர் அண்ணமலை தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில் விவசாய பெருங்குடி மக்களின் குரலுக்கும் பாஜகவினரின் குரலுக்கும் செவி சாய்த்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் அனைத்து தரப்பு மக்களின் உரிமைக்காக தொடர்ந்து தமிழக பாஜக குரல் எழுப்பும் என்பதை மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.