“18 சதவீத இட ஒதுக்கீடு.. அமல்படுத்த வேண்டும்” – இட ஒதுக்கீட்டு உரிமை இயக்கம் வலியுறுத்தல்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என, இட ஒதுக்கீட்டு உரிமை இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அழகப்பன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில், இடஒதுக்கீட்டு உரிமை இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட மாநில ஒருங்கிணைப்பாளர் அழகப்பன், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 18 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவ்வாறு இடஒதுக்கீட்டை அமல்படுத்தாவிட்டால், தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அழகப்பன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை, அருந்ததியினருக்கான 3 சதவீத உள் இட ஒதுக்கிட்டை, நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

Recent News