விஜயகாந்த் குறித்து அண்ணாமலையின் பதிவு !

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில காலங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறாா்.இதனால் தொடா் சிகிச்சை பெற்று வரும் இவா் தற்போது மியாட் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.இவாின் உடல்நலம் குறித்து மியாட்மருத்துவமனை அவ்வப்போது மருத்துவ அறிக்கை வெளியிட்டு வருகிறது. இறுதியாக அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று தகவலை அறிந்த பலரும் தங்களது வருத்தங்களை சமூகவலைதளங்களில் தொிவித்துவருகின்றனா்.

இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிா்ந்துள்ளாா்.அதில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News