சினிமா
அன்னப்பூரணி பட சர்ச்சை….மன்னிப்பு கேட்ட தயாரிப்பு நிறுவனம்..!!
அறிமுக இயக்குனரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் அன்னபூரணி.
இப்படம் கடந்த டிசம்பர் 1 இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2023/12/annapoorani.jpg)
அன்னபூரணி திரைப்படத்தில் ராமர் பற்றி விமர்சித்திருப்பதாகவும், ராமர் மாமிசம் சாப்பிடுவார் என கூறப்பட்டிருக்கும் காட்சிகளும் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாக அன்னபூரணி திரைப்படத்தின் மீது புகார் கொடுக்கப்பட்டது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2024/01/02870ea2-5445-4bd1-9974-0620d2c0d4ed-872x1024.jpg)
இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டைன்மென்ட் கடந்த சில தினங்களுக்கு முன்பு மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டது. அந்த கடிதத்தில், புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கும் விஷயத்தை கணக்கில் எடுத்துக் கொள்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும். தெரிந்தே இந்த மாதிரியான தவறுகள் நடக்கவில்லை எனவும் இந்த விஷயத்தினால் புன்பட்ட ஹிந்து மற்றும் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)