ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அந்நியன்’. சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த படம் என பல்வேறு தேசிய மற்றும் மாநில விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.
இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் அல்ட்ரா HD எனப்படும் 4கே தரத்தில், தீபாவளிக்கு பிறகு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நியன்2 வை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இது சற்றே ஆறுதலை தரும் என்று சொல்லலாம்.