Trending
தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி தமிழக ஆரசு அரசணை வெளியிட்டது. இதனை பல்வேறு பால் கூட்டுறவு அமைப்புகள் பால் உற்பத்தியாளகள் வரவேற்ற நிலையில், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் பால் விலை உயர்த்தப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர் அண்ணாமலை, பால் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் வரும் 15-ஆம் தேதி பாஜக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தார்.
