திமுக- காங்கிரஸ்,மதிமுக போட்டியிடும் தொகுதிகள் இறுதிச் செய்யப்பட்டது.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியை சேர்த்து 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியது.
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, 10 தொகுதிகள் அடங்கிய பட்டியலுடன் கூடிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அதன் விவரம், கன்னியாகுமரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி, புதுச்சேரி காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக- மதிமுகவிற்கு திருச்சி தொகுதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.