கர்நாடகா மாநிலத்தில் வரும் 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அவருக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இந்நிலையில் கர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டியில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான டி. அன்பரசன் அவர்கள் தனது வேட்பு மனுவை திரும்ப பெறுவதாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் 2 பேர் வாபஸ் பெற்ற நிலையில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் அன்பரசனும் வாபஸ் பெற்றுள்ளார்.
தலைமைக் கழக செய்தி. pic.twitter.com/2BJYk1lmD4
— AIADMK (@AIADMKOfficial) April 24, 2023