மீன்பிடி தடை காலம் முடிந்துவிட்டதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாகை மீனவர்கள், இன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும், மீன்பிடி தடை காலம் விதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சமீபத்தில், மீன்பிடி தடை கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மீன்பிடி தடை காலம் நிறைவடைவதால், 60 நாட்களுக்கு பிறகு, நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள், இன்று மீன்பிடிக்கச் கடலுக்கு சென்றனர்.
முன்னதாக, நிறைய மீன்கள் கிடைக்க வேண்டும் என்று, கடல் மாதாவிற்கு சிறப்பு பூஜைகளையும் செய்திருந்தனர்.