2025-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடைபெற்றது.
இந்த விழாவில், சிறந்த கதை, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிகர், நடிகை, வெளிநாட்டு திரைப்படம் என்று பல்வேறு பிரிவுகளில், விருதுகள் வழங்கப்பட்டது.
அந்த வகையில், இந்த விழாவில், ஒரே படத்திற்கு 5 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் அனோரா.
இந்த திரைப்படத்தை, ஷான் பேகர் என்பவர் இயக்கியிருந்தார். காமெடி, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியிருந்த இந்த திரைப்படம், மொத்தமாக 5 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது.
இதில், சிறந்த இயக்குநர், திரைக்கதை, படத்தொகுப்பு, சிறந்த படம் ஆகிய 4 பிரிவுகளில், இப்படத்தின் இயக்குநரே விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.