வாரிசில் மீண்டும் ஒரு அரபிக்குத்து பாடல்..!

விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட் . அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில், அரபிகுத்து என்ற பாடல் இடம்பெற்று மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த நிலையில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின், முதல் பாடல் ரஞ்சிதமே ரஞ்சிதமே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் 2-வது பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ள நிலையில், அனிருத் ஒரு பாடல் ஒன்று பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரபிக்குத்து வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் விஜய் படத்தில் பாடுவது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.