கர்நாடகாவில் இன்னொரு பொம்மன் பெல்லி தம்பதி …!!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராஜு ரம்யா தம்பதி . இவர்கள் ராமப்புரா யானைகள் பயிற்சி முகாமில் உள்ள யானை குட்டிகளை  பராமரித்து வருகின்றனர்  .

இந்நிலையில் பிறந்து ஏழே நாட்களில்  தாயை பிரிந்த பெண் குட்டி யானையை பராமரிக்கும் பொறுப்பை வனத்துறையினர் ராஜூ ரம்யா தம்பதியினருக்கு வழங்கினர்.அன்றிலிருந்து குட்டி யானைக்கு வேதா என பெயர் சூட்டி தங்கள் பிள்ளை போல் வளர்த்து வருகிறார்கள் .

குட்டி யானையும் அன்பாகவும் நட்பாகவும் அவர்களுடன் விளையாடி மகிழ்கிறது .

சமீபத்தில் வெளியான “The Elephant Whisperers” என்ற ஆவணப்படம் பொம்மன் பெல்லி தம்பதியினரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதையும் வென்றது . பொம்மன் பெல்லி ஆகிய இருவரும் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் சரணாலயத்தில் தாயை இழந்து வாடும் யானை குட்டிகளை பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இதேபோல் ராஜு ரம்யா தம்பதியினரும் யானை குட்டிகள் பராமரிப்பில் ஈடுபடுவதால் அவர்கள் இன்னொரு பொம்மன் பெல்லி தம்பதியாக வலம் வருகின்றனர். 

RELATED ARTICLES

Recent News