வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படத்தில், சமுயுக்தா மேனன் ஜோடியாக நடித்து இருந்தார். வெளியான 25-நாட்களில் சுமார் 100 கோடிக்கும் மேலான வசூலை பெற்று அசத்தி வருகிறது.
இதனிடையே வாத்தி படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இது படத்தின் மற்றொரு கிளைமாக்ஸ் காட்சியாக அமைந்துள்ளது என திரைவட்டாரங்கள் கூறிவருகின்றனர். மேலும் இதேபோன்று வேறு நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகுமா என ரசிகர்கள் எதிபார்த்துள்ளர்.