ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை..! கண்டுகொள்ளாத ஆளுநர்

சென்னை தாம்பரம் அருகே ஆன்லைன் ரம்மியால் ரூ.20 லட்சத்தை இழந்த மருத்துவ நிறுவன பிரதிநிதி வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (36). இவர் மருந்து நிறுவன பிரதிநிதியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான வினோத் குமார் பல்வேறு லோன் ஆப்களில் சுமார் ரூ. 20 லட்சம் வரை கடன் வாங்கி விளையாடி கடைசியில் மொத்த பணத்தையும் இழந்துள்ளார்.

கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த வினோத் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வினோத்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News