கடந்த சனிக்கிழமை அன்று, கோரமண்டல் எக்ஸ்பிரஸ்-ம், ஹாவுரா எக்ஸ்பிரஸ்-ம், சரக்கு ரயிலும், ஒன்றுக் கொன்று மோதி, விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 280-க்கும் மேற்பட்டோர், பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம், நாடு முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஒடிசாவில், இன்னொரு கொடூர சம்பவம் ஒன்று, நடந்துள்ளது. அதாவது, தனியார் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனத்திற்கென்று, தனியாக ரயில் பாதை இருந்து வருகிறது. இந்த ரயில் பாதையில், அந்த சிமெண்ட் நிறுவனத்திற்கு தேவையான கச்சா பொருட்கள், எடுத்துச் செல்லப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை, அந்த சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ரயில் மூலம், பர்கார் பகுதியில் இருந்து, சுன்னாம்புக்கல் கொண்டுவரப்பட்டது. டங்குரி என்ற பகுதியில் ரயில் வந்தபோது, யாரும் எதிர்பார்க்காத விதமாக, சரக்கு ரயில் தடம் புரண்டது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து பதிவிட்டுள்ள இந்தியன் ரயில்வேத்துறை, “இந்த விபத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் சம்பந்தம் இல்லை.. தடம் புரண்ட ரயில், அந்த ரயில் வந்த பாதை என்று அனைத்தையும், அந்த தனியார் சிமெண்ட் நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.