சென்னை அண்ணாநகர் பகுதியில் இளம் பெண்கள் சிலர் வீடு வாடகை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அறையில் தங்கி இருந்த பச்சையம்மாள் என்ற பெண் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இதனால் கடந்த ஆறு மாதங்களாக வாடகை கொடுக்காமல் தங்கி வந்துள்ளார்.
அப்போது உடன் தங்கி இருந்த 20 வயதுடைய பெண் ஒருவர் பச்சையம்மாளிடம்
நீ கடந்த சில மாதங்களாக வாடகை பணம் தரவில்லை, மற்றும் ஓசியில் சாப்பிட்டு விட்டு ஊர் சுற்றி வருகிறார், எனவே அறையை காலி செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதை அடுத்து பச்சையம்மாள் இளம் பெண் குளிக்கும் வீடியோவை காண்பித்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் அந்த வீடியோவை நீக்குமாறு கேட்டதற்கு நீ குளிக்கும் போது இந்த வீடியோவை எடுத்து வைத்துள்ளேன், நான் வாடகை கொடுக்காமல் இங்கு தான் தங்குவேன், என்னை வெளியே அனுப்ப நினைத்தால் உனது வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன இளம் பெண் இது குறித்து ஜெ ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் ஆபாச படம் எடுத்து மிரட்டல் விடுத்த பெண்ணை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.