“ராகுல் காந்தி படிப்பறிவு இல்லாத குழந்தை”

மிசோரம் மாநிலத்தில் வரும் நவம்பர் 7-ஆம் தேதி அன்று, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பின்னணி பணிகள், அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக கட்சியில் வாரிசு அரசியல் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் கவுன்சிலில் செயலாளராக பதவி வகித்து வருகிறார். அவர் அங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறார்.

இதேபோல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகனும், உத்தரபிரதேசத்தில் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். அவர் அங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறார். பாஜகவில் வாரிசு அரசியல் நடந்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த் சர்மா, இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த விஷயத்தில் அமித்ஷாவின் மகன் எப்படி வந்தார். அவர் பாஜகவிலேயே இல்லையே. ஆனால், ராகுல் காந்தியின் ஒட்டுமொத்த குடும்பமும், அரசியலில் தான் உள்ளது.

இந்தியாவின் கிரிக்கெட் கவுன்சில், பாஜகவின் அணி என்று ராகுல் காந்தி நினைக்கிறார். அவரை பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். அவர் ஒரு படிப்பறிவு இல்லாத குழந்தை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஹிமாந்த் சர்மா, “ராஜ்நாத் சிங்கின் மகன் உத்தரபிரதேசத்தில் வெறும் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். ஆனால், ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளாரே.” என்று கூறினார்.

மேலும், “ராகுல் காந்தி புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு, வாரிசு அரசியல் பற்றி பேசலாம். ராகுல் காந்திக்கு அரசியல் பற்றி அறிவு சுத்தமாக கிடையாது. அவரும் வாரிசு அரசியலின் மையம் தான் என்பது, அவருக்கு புரியவில்லை.

இவரது குடும்பத்தில் உள்ள, தாய், தந்தை, தாத்தா, சகோதரி, சகோதரர் என்று அனைவரும் அரசியலில் தான் உள்ளார்கள் மற்றும் அந்த கட்சியையே ஆள்கிறார்கள். ஆனால், இதை எப்படி, பாஜகவோடு ஒப்பிட முடியும்” என்று கூறினார்.

RELATED ARTICLES

Recent News