ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் என்ற திரைப்படம், வரும் 10-ம் தேதி அன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த திரைப்படத்தின் புரமோஷனுக்காக, நிகழ்ச்சி ஒன்றில், சமீபத்தில் ஷங்கர் கலந்துக் கொண்டுள்ளார்.
அப்போது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல, கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சை குறிப்பிட்டுள்ள இயக்குநர் அனுராக் காஷ்யப், ஷங்கர் போன்ற ஜாம்பவான் இயக்குநர்கள், இதுமாதிரியான பேசுவது வருத்தம் அளிக்கிறது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல் படத்தை எடுத்திருக்கிறேன் என்று அவர் கூறினால், ரசிகர்களின் தேவைக்காக இயக்குநர் தன்னை மாற்றியதாக, மாறிவிடும் என்று கூறியுள்ளார்.