Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பயங்கரமாக கோபப்பட்ட அனுஷ்கா சர்மா.. வீடியோ வைரல்..

சினிமா

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பயங்கரமாக கோபப்பட்ட அனுஷ்கா சர்மா.. வீடியோ வைரல்..

டி20 உலகக் கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள நாசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆனால், இந்திய அணியின் இந்த வெற்றி வைரலாவதற்கு பதிலாக, அனுஷ்கா சர்மா தான் வைரல் ஆகியிருக்கிறார்.

அதாவது, இந்த கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு, அனுஷ்கா சர்மா மைதானத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம், கடும் கோபமாக பேசியுள்ளார்.

ஆனால், எதற்காக அவர் கோவப்பட்டார்? என்பது தொடர்பான தகவல் எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top