Connect with us

Raj News Tamil

அடுக்குமாடி குடியிருப்பு; ஒரு யூனிட்டுக்கு ரூ.8-லிருந்து ரூ.5.50-ஆக குறைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

அடுக்குமாடி குடியிருப்பு; ஒரு யூனிட்டுக்கு ரூ.8-லிருந்து ரூ.5.50-ஆக குறைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஒரு யூனிட்டுக்கு ரூ.8-லிருந்து ரூ.5.50-ஆக குறையும். இதனால் மாநிலம் முழுவதும் உள்ள சிறு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயனடைவா் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வா் பேசியதாவது: சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புகா் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. சமீபத்தில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண முறையை மாற்றி அமைத்தபோது, இந்தக் குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீா் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொதுப் பயன்பாட்டுப் பணிகளுக்கான மின்கட்டணங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதனால் பொது வசதிகளுக்கான மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8-க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. இந்தக் குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச் சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளதன் அடிப்படையில், இதைப் பரிசீலித்து, 10 வீடுகள் அல்லது அதற்குக் குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்குக் குறைவாகவும் உள்ள, மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டுக்கான புதிய சலுகைக் கட்டணமுறை நடைமுறைப்படுத்தப்படும்.

இதன் கீழ், பொதுப் பயன்பாட்டுக்குச் செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8-லிருந்து ரூ.5.50-ஆக குறையும். இதனால் மாநிலம் முழுவதும் உள்ள சிறு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயனடைவா்.

உரிய காலத்தில், குடிநீா்த் திட்டங்கள், பாலங்கள், சமூக நலத் திட்டங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றித் தருவது நம்முடைய இலக்காக இருக்க வேண்டும்.

அரசின் உள்கட்டமைப்புப் பணிகள் பெரும் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. அவை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்படவேண்டும் என்பதை அந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பே முடிவு செய்கிறோம். அதன்படி, முடிக்கப்படாத நிலையில் திட்டத்துக்கான செலவு அதிகரிப்பதுடன், நிறைவேறாத பணிகளினால் அந்தப் பகுதி மக்கள் பாதிப்புக்கும் உள்ளாகின்றனா்.

அதனால், கட்டுமானப் பணிகளைக் குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிக்க வேண்டும். அதைப்போல விளிம்பு நிலை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்படும் திட்டங்கள் எந்தவித குறைபாடுமின்றி முழுமையாக குறிப்பிட்ட காலத்துக்குள் அவா்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றார் முதல்வா்.

More in தமிழகம்

To Top