Connect with us

Raj News Tamil

நடுரோட்டில் பிணமாக கிடந்த அபூர்வ சகோதரர்கள் பட நடிகர்..!

சினிமா

நடுரோட்டில் பிணமாக கிடந்த அபூர்வ சகோதரர்கள் பட நடிகர்..!

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர், அபூர்வ சகோதரர்கள், அதிசய மனிதர்கள், நான் கடவுள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். மனைவி உயிரிழந்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய மோகன், கடந்த 6 மாத காலமாக திருப்பரங்குன்றத்தில் பிச்சை எடுத்துவந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் மோகன் இறந்த கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, அவரது உடலானது சொந்த ஊரான சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top