Connect with us

Raj News Tamil

ஹாக்கிங் எச்சரிக்கை.. எதிர்கட்சி எம்.பி-க்கள் அதிர்ச்சி.. ஆப்பிள் நிறுவனம் கொடுத்த விளக்கம்!

இந்தியா

ஹாக்கிங் எச்சரிக்கை.. எதிர்கட்சி எம்.பி-க்கள் அதிர்ச்சி.. ஆப்பிள் நிறுவனம் கொடுத்த விளக்கம்!

பாஜக தலைமையிலான மத்திய அரசு, எதிர்கட்சி தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்பதாக, குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில், எதிர்கட்சி எம்.பி-க்களின் செல்போன்களுக்கு, ஹாக்கிங் தொடர்பான எச்சரிக்கை நோடிபிகேஷன் இன்று அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக, பாஜகவின் தலைவர்கள், சில பதில்களை கூறி வந்தாலும், எதிர்கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதுவரை, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா, சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் எம்.பி பவன் கேரா மற்றும் சசி தரூா், ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா, சி.பி.ஐ.எம்மின் சீதாராம் யெச்சூரி ஆகியோர், ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து, தங்களது ஹாக்கிங் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், “ஐபோன் சொல்போன்களில் எந்தவொரு ஹாக்கிங் தாக்குதலும் நடத்தப்படவில்லை. ஹாக்கிங் செய்யப்பட்டதாக வந்த நோடிபிகேஷன் தவறான எச்சரிக்கை செய்தியாக இருக்கலாம்.

ஆனால், இந்த எச்சரிக்கை செய்தி எதனால் வந்தது என்று இதுவரை எங்களால் கண்டறிய முடியவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top