ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் குறித்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், கஜினி பட பாணியில் இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், இன்னும் 22 நாட்கள் படப்பிடிப்பு மீதம் உள்ளது என்றும், அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவோம் என்றும், அவர் கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிட்ட கஜினி திரைப்படம், அவரது வாழ்க்கையில், மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.