10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்!

பண மோசடி செய்ததாக தம் மீது புகார் கூறிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு 10 கோடி நஷ்டஈடு கேட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இசை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி ஏமாற்றியதாக ஏ.ஆர்.ரஹ்மான் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரூ.10 கோடி மான நஷ்டஈடு கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் புகார்தாரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அசிக்கான் அமைப்புடன் ரஹ்மான் எவ்விதத்திலும் தொடர்பிலோ, ஒப்பந்தத்திலோ இல்லாத நிலையில், மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

இசை நிகழ்ச்சி நடத்துவதாக ரூ.29 லட்சம் முன்பணம் பெற்று ஏ.ஆர்.ரஹ்மான் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், 15 நாட்களுக்குள் ரூ.10 கோடி மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அசிக்கான் அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News