தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான். நேற்று லண்டனில் இருந்து சென்னைக்கு வந்திருந்த இவருக்கு, இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பிரபல தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது, இவ்வாறு இருக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ.ஆர்.ரகுமானின் உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், ஏ.ஆர்.ரகுமான் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று, எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.