Connect with us

Raj News Tamil

மறக்குமா நெஞ்சம் – ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மழையில் நனைய தயாரா..?

சினிமா

மறக்குமா நெஞ்சம் – ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மழையில் நனைய தயாரா..?

ரோஜா படத்தின் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் இவர் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் கற்றார் டிஜிட்டல் தளம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று மழையால் ஒத்திவைப்பட்ட மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், விஷுவல் மற்றும் லைட்ஸ் எஃபக்ட்ஸ் உடன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் இணைந்து உங்களை மாயாஜால உலகத்திற்கு அழைத்துச் செல்ல போகிறோம் என்றும் கற்றார் டிஜிட்டல் தளம் அறிவித்துள்ளது.

மழையால் நின்ற இந்நிகழ்ச்சியில் மீண்டும் இசைமழையில் நனைய ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

More in சினிமா

To Top