நயன்தாரா நடிப்பில், கடந்த 2017-ஆம் ஆண்டு உருவான திரைப்படம் அறம். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தை, இயக்குநர் கோபி நயினார் இயக்கியிருந்தார்.
இந்த படம் வெளியாகி, நீண்ட வருடங்கள் ஆகியும், அடுத்த திரைப்படத்தை இயக்காமலே இருந்து வந்தார்.
இந்நிலையில், கோபி நயினார் இயக்க உள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கருப்பர் நகரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர்.