Connect with us

Raj News Tamil

வெளியானது அரண்மனை 4 டிரைலர்! ரசிகர்களை கவர்ந்ததா?

சினிமா

வெளியானது அரண்மனை 4 டிரைலர்! ரசிகர்களை கவர்ந்ததா?

கடந்த 2014-ஆம் ஆண்டு, சுந்தர் சி இயக்கத்தில், விநய், ஹன்சிகா, சந்தானம் ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் அரண்மனை. ப்ளாக் பஸ்டர் வெற்றிப் பெற்ற இந்த திரைப்படம், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், அதற்கு அடுத்தடுத்து வந்த பாகங்கள், ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இந்நிலையில், இப்படத்தின் 4-ஆம் பாகத்தை, இயக்குநர் சுந்தர் சி எடுத்துள்ளார்.

இப்படத்தில், நடிகை தமன்னா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதற்கிடையே, இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள், ஏற்கனவே பார்த்த காட்சிகளே, இந்த டிரைலரிலும் இருப்பதாக கூறி வருகின்றனர். ஒருசிலர், இப்படத்தின் பாகங்கள் முடிவதற்கு வாய்ப்பே இல்லையா என்றும் கலாய்த்து வருகின்றனர்.

ஆனால், கோடை விடுமுறையை மனதில் வைத்து வெளியாக உள்ள இப்படம், குழந்தைகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், இந்த பாகமாவது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவருமா என்று..,

More in சினிமா

To Top