சுந்தர் சி இயக்கத்தில், கோவை சரளா, யோகி பாபு, தமன்னா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் அரண்மனை 4. கடந்த மே மாதம் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
மேலும், 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் 5-ஆம் பாகத்தை எடுப்பதற்கு, சுந்தர் சி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.
இந்த படத்திற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டம் தீட்டியுள்ளார்களாம்.
இவ்வாறு அடுத்தடுத்த வருடங்களில், அரண்மனை சீரிஸ் படங்களை அவர் இயக்கி வருவது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.