தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோ ஒன்றில், போட்டியாளராக கலந்துக் கொண்டவர் அர்ச்சனா.
பல்வேறு சவால்களை மீறி, அந்த போட்டியில் டைட்டில் பட்டத்தையும் அவர் வென்றுவிட்டார். இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் இருந்தபோதிலும், இவர் டைட்டில் பட்டம் வென்றதற்கு, ஒருசில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வெறுப்பு என்பது மிகவும் கனமானது. அன்பு என்பது லேசானது. புத்திசாலிதனமாக தேர்வு செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.