தமிழக சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மானிய கோரிக்கை விவாதத்தில் கொங்கு ஈஸ்வரன் எம்எல்ஏ பேசினார்.
அவர் பேசியதாவது:
உலகில் சோம்பேறிகளின் எண்ணிக்கை 45 சதவீதமாக அதிகரித்துள்ளது.இன்றைய இளைஞர்கள் கடைக்கு சென்று சாப்பிடக் கூட சோம்பேறித்தனப்பட்டு சுவிக்கி, சொமாட்டோவில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள்.
காலையில் விரைவாக எழுந்தால் சோம்பேறித்தனம் போய்விடும். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளை அதிகாலையில் எழுப்ப தயராக இல்லை, 10 மணி வரை குழந்தைகளை தூங்க வைக்கின்றனர்.
இந்தியாவின் மக்கள் தொகையான 140 கோடியில் 40 கோடி இளைஞர்கள் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் இளைஞர்கள் அதிகம். 42.2 சதவீதம் என்று இருந்த வேலைவாய்ப்பின்மை தற்போது 65.7 சதவீதமாக தமிழகத்தில் உயர்ந்துள்ளது.
ஆனால் ஒழுக்கக் கேடுக்கு முக்கிய காரணமாக மதுதான்.மது குடிக்கத் தெரியாதவனை கல்லூரி யில் சக மாணவர்கள் சாம்பார் சாதம் , தயிர் சாதம் என கேலி செய்யும் நிலை உள்ளது.
சினிமாவில் பெண்களே ஆண்களைப் பார்த்து, பீர் கூட குடிக்க தெரியாத சப்பையாடா நீ என வசனம் பேசுவதுலாம் வருது. இதுலாம் கேக்கவே வேதனையா இருக்கு மது குடித்தால்தான் வீரமானவன் , பெண்கள் காதலிப்பார்கள் என்று சினாமா மூலம் இளைஞர்களுக்கு தோன்ற வைக்கிறார்கள் என்று பேசினார்.