“கேப்ரில்லாவுடன் காதலா..?” – ஆஜித் சொன்ன பதிலால் அதிர்ச்சி!

பிக்-பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும், ஒவ்வொரு காதல் கதைகள் நடந்தேறியுள்ளன. முதல் சீசனில், ஓவியா-ஆரவ், இரண்டாவது சீசனில், மகத்-யாஷிகா, 3-வது சீசனில், கவின்-லாஸ்லியா, 4-வது சீசனில் பாலாஜி-ஷிவானி, 5-வது சீசனில், பாவ்னி-அமீா் ஆகியோரின் காதல் பரபரப்பாக பேசப்பட்டது.

இவர்களை போன்றே, 4-வது சீசனில் கலந்துக் கொண்ட, கேப்ரில்லா-ஆஜித் ஆகியோரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. காரணம், அந்த அளவிற்கு இருவரும் நெருக்கமாக இருந்து வந்தனர். பிக்-பாஸில் இருந்து வெளியே வந்த பிறகும், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நீங்களும், கேப்ரில்லாவும் காதலித்து வருகிறீர்களா என்ற நீண்ட நாள் கேள்விக்கு, ஆஜித் தற்போது பதில் அளித்துள்ளார்.

“பிக்பாஸ் வீட்டில் உண்மையில் நிறைய சண்டை போட்டது நானும் கேபியும் தான். ஆனாலும் நாங்கள் உடனே சேர்ந்துவிடுவோம். அதையெல்லாம் எடிட்டிங்கில் நீக்கிவிட்டார்கள். எங்கள் இருவருக்கும் எப்போதுமே காதல் எண்ணங்கள் ஏற்பட்டத்தில்லை. நாங்கள் அண்ணன் தங்கை போல் தான் பழகி வருகிறோம்” என்று கூறியுள்ளார். இவர்கள் இருவரும் காதலர்கள் என்று எதிர்பார்த்த பலருக்கு, இந்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.