விருது வாங்கும்போது ஆபாச சைகை.. அர்ஜெண்டினா கோல் கீப்பரால் அதிர்ச்சி.. வைரல் வீடியோ!

2022-ஆம் ஆண்டுக்கான உலக கால்பந்து தொடரின் இறுதி போட்டியில், பிரான்ஸ் அணியும், அர்ஜெண்டினா அணியும், மோதின. இதில், 4-2 என்ற கோல் கணக்கில், பிரான்ஸை வீழ்த்தி, அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.

இதில், தொடர் நாயகனுக்கான விருது மெஸ்ஸிக்கும், கோல்டன் பூட் விருது எம்பப்பே-க்கும் வழங்கப்பட்டது. மேலும், சிறந்த கோல் கீப்பருக்கான “கோல்டு க்ளொவ் விருது“ அர்ஜெண்டினா கோல் கீப்பர் எமிலியோனாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை, எமிலியோனா வாங்கியபோது, ஆபாசமான சைகைகளை செய்துள்ளார்.

எமிலியோனாவின் இந்த ஆபாசமான செயலுக்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், பிரான்ஸ் கால்பந்து வீரர்கள் என்னை கேலி செய்தனர். அதற்காக தான் நான் அவ்வாறு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த செயலுக்கு எதிராக, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.