இவர் தான் தெருக்குரல் அறிவின் காதலியா?

ரஜினிகாந்தின் காலா படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு. இதையடுத்து, பல்வேறு படங்களில் பாடல்களை பாடியுள்ள இவர், எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் பிரபலம் அடைந்தார்.

தற்போது, தமிழ் சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், என் திமிரான தமிழச்சி என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது கால்களையும், காதலியின் கால்களையும், புகைப்படமாக எடுத்துள்ளார்.

கல்பனா அம்பேத்கர் என்பவரை தான் அவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள், வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.