“வெக்கமே இல்லையா” – அவதார் Decoding.. அர்ஜூன் சம்பத்தின் புது உருட்டு.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு அன்று வெளியான திரைப்படம் அவதார். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நிகழ்த்தியது.

தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பார்ப்பன சித்தாந்தத்தை பரப்பிய ஜேம்ஸ் கேமரூனுக்கு கண்டனம் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அவதார் என்பது சமஸ்கிருத பெயர் என்றும், நீல நிறம் கிருஷ்ணரின் நிறம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நெற்றியில் இருப்பது நாமம் என்றும், டிராகன் என்பது கருடன் என்றும், திமிங்கலம் என்பது மச்ச அவதாரம் என்றும் பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு இணையத்தில் வெளியாகி, கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

“இந்த விஷயம் ஜேம்ஸ் கேமரூனுக்கு தெரியுமா?”.. “இப்படி பேசுவதற்கு வெக்கமே இல்லையா?”.. “அவதாருக்கே நாமம் போட்டுவிட்டீர்களே” என்று பலதரப்பட்ட கமெண்ட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.