இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் ராஜ்நாத் சிங். இவர், தசரா விழா மற்றும் சாஸ்த்ரா பூஜையை முன்னிட்டு, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள டவாங் பகுதியில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்களை, நேற்று சந்தித்தார்.
மேலும், அவர்களுடன் இணைந்து அந்த விழாவை கொண்டாடினார். இதையடுத்து,அங்கிருந்து ராணுவ வீரர்களிடம் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், நம் இந்திய நாட்டின் ராணுவ வீரர்கள், எந்தவொரு சவால்களையும், நெருக்கடிகளையும் சமாளிக்கக் கூடியவர்கள் என ஒட்டுமொத்த பாரதமும் உறுதியாக நம்புகிறது என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் ராணுவ வீரர்கள் தான், சகோதரத்துவத்தின் உண்மையான எடுத்துக்காட்டுகளாக உள்ளனர்.
ஏனென்றால், பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மதங்களில் இருந்து வந்து, ஒரே படைமுகாமில் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறார்கள் என்று கூறினார்.