ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : முன்னாள் பாஜக நிர்வாகிக்கு நீதிமன்ற காவல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, திருவேங்கடம், வக்கீல் அருள் உள்பட 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர்.

கைதான 11 பேரிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்றது. அப்போது போலீசார் பிடியில் இருந்து தப்பிய ரவுடி திருவேங்கடம் போலீசார் ‘என்கவுண்ட்டர்’ மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் தாதாவும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான அஞ்சலையும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தலைமறைவாக அஞ்சலையை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலைக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து அஞ்சலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

RELATED ARTICLES

Recent News