தலித் இளைஞர்களை மலம் சாப்பிடுமாறு வற்புறுத்திய 7 பேர் கைது..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டியல் சமூக இளைஞர்கள் 2 பேருக்கு செருப்பு மாலை அணிவித்து, மனித மலத்தை தின்ன வைத்த கொடூரம் அரங்கேறி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக பெண்கள், பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் பழங்குடி சமூக இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தை சேர்ந்த பட்டியலின இளைஞர் இருவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பிறகு அந்த இளைஞர்கள் தவறு செய்யவில்லை என்றும் இது பொய்யான புகார் என்றும் தெரியவந்தது.

இதனிடையே பட்டியல் இன இளைஞர்களை கடுமையாக தாக்கி அவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து இருவரையும் மலம் தின்னை வைத்த கொடூரமும் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News