மனைவியை தற்கொலைக்கு தூண்டிய, கணவர் கைது!

கள்ளக்குறிச்சி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்கீரனூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கும் இவரது மனைவி உஷாவுக்கும் இடையே, குடும்பத் தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், உஷா தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் நடத்திய விசாரணையில், பெரியசாமி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.